சென்னை மெட்ரோ ரயில் சேவை: இன்று நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு!
கோப்புப்படம்சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (13.10.2021) மட்டுமே. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று (13.10.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன pic.twitter.com/4FC0eN7P5H
— Chennai Metro Rail (@cmrlofficial) October 13, 2021
Related Tags :
Next Story






