மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - பொதுப்பணித்துறை


மேட்டூர் அணையின் நீர்மட்டம்  100 அடியை எட்டியது - பொதுப்பணித்துறை
x
தினத்தந்தி 24 Oct 2021 6:50 AM GMT (Updated: 2021-10-24T12:30:33+05:30)

மேட்டூர் அணை நீர்மட்டம் 67ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, கடந்த சில நாட்களாக, அதிகரித்துக் காணப்பட்டது. 

இந்த நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 67ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.  கடந்தாண்டு 4 முறை 100 அடியை எட்டிய நிலையில் இந்தாண்டு முதல்முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 

120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு 28,650 கனஅடி நீர்வரத்து உள்ளது.  மேட்டூர் அணையின் 88 ஆண்டு வரலாற்றில் 77-வது ஆண்டாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்திருக்கிறது.

Next Story