கனமழை எதிரொலி: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Dec 2021 7:38 AM IST (Updated: 1 Dec 2021 7:39 AM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் அடித்தது. அவ்வப்போது மேக மூட்டம் வந்து மிரட்டினாலும் மழை பெய்யவில்லை. இதனை பயன்படுத்தி வீடுகளை சூழ்ந்து உள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story