எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க கூடாது தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்


எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க கூடாது தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Dec 2021 2:53 AM IST (Updated: 20 Dec 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு: எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க கூடாது தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடசென்னை எண்ணூரில் 660 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. சூழலியல் சீர்கேட்டை விளைவித்து, காலநிலை மாற்றத்துக்கு காரணமாக அமையும் வகையிலான இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. மக்களின் விருப்பத்துக்கும், மண்ணின் நலனுக்கும் எதிரான அனல் மின்நிலைய திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இத்திட்டத்துக்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வரும் ஜனவரி 6-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு அரசு தரப்பு இத்திட்டத்தில் இருக்கக்கூடியச் சிக்கல்களை முன்வந்து ஆராய வேண்டும். இத்திட்டம் கருத்துக்கேட்புக்கூட்டம் வரை கொண்டு செல்லப்படக்கூடாது. அனல் மின்நிலைய திட்டத்தை உடனடியாகவும், முழுவதுமாகவும் கைவிட தமிழக அரசு முன்னேற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, இத்திட்டம் முன்நகர்ந்தால் இதன் தீயவிளைவுகளை எடுத்துரைத்து, மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி மிகத்தீவிரமாகப் போராடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story