தஞ்சை: முன்னாள் முதல்-அமைச்சர்களின் சிலைகளை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் நாளை நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்நிலையில் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோருடைய முழு உருவச்சிலைகள் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு அவர், சுற்றுலா ஆய்வு மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 43 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்குகிறார். மேலும் அவர், ரூ.98 கோடியே 77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 90 பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரூ.894 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 133 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
Related Tags :
Next Story