தமிழக கவர்னரின் செயலுக்கு கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு


தமிழக கவர்னரின் செயலுக்கு கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 3:43 AM IST (Updated: 5 Feb 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரின் செயலுக்கு கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திருப்பி அனுப்பிய கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ‘டுவிட்டரி’ல் கருத்து பதிவிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

கனிமொழி:- சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக கவர்னர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் தேவையையும், அதன் பிரச்சினைகளையும் களைய அந்த மாநிலத்தை ஆளும் அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிமை இல்லை என்று சொல்வதாகவே கவர்னரின் செயல் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையைப் பறிக்கும் நிலை-ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்குகிறது.

உதயநிதி ஸ்டாலின்:- ‘நீட்’ விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத்தொகுப்பு. ஏ.கே.ராஜனின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது கவர்னருக்கு தெரியாமல் போனது ஏன்? நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை கவர்னர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வைரமுத்து:- திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை. மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை. முதல்-அமைச்சர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவை ராஜ்பவனும், ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல, இருள்கட்டிக் கிடக்கும் ஏழைக் குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story