தமிழகத்தில் புதிதாக 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Feb 2022 7:26 PM IST (Updated: 17 Feb 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில்  ஒருநாள் கொரோனா பாதிப்பு1,310 ல் இருந்து 1,252 ஆக குறைந்துள்ளது. இன்று 83,861 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 1,252 பேருக்கு கொரோனா உறுதியானது.

சென்னையில் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் ஏற்கனவே 296 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 285 ஆக குறைந்துள்ளது.

கொரோனாவால் மேலும் 6 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,962 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர். 

கொரோனாவில் இருந்து 4,768 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை  33,80,049 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 23,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story