சம வாக்கு பெற்ற வேட்பாளர்கள் - குலுக்கலில் வென்ற பாஜக


சம வாக்கு பெற்ற வேட்பாளர்கள் - குலுக்கலில் வென்ற பாஜக
x
தினத்தந்தி 22 Feb 2022 8:57 PM IST (Updated: 22 Feb 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் வள்ளியூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனுவேல் மற்றும் அதிமுக வேட்பாளர் உஷா ஆகிய இருவரும் தலா 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். 

தேர்தல் ஆணைய விதிகளின் படி இரு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் ஒருவரின் பெயர் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் வேட்பாளர்களிடம் தெரிவித்துவிட்டு குலுக்கல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில், பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

Next Story