எம்.பி. தேர்தலில் பாஜக சார்பில் மனு செய்தவர் - நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி
எம்.பி. தேர்தலில் பாஜக சார்பில் மனு செய்தவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவில் இணைந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
நீலகிரி,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் உள்ள 23-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட குருமூர்த்தி என்பவர் 260 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த எம்.பி. தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story