தமிழகம் திரும்பும் உக்ரைன் மாணவர்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 12 March 2022 8:59 AM IST (Updated: 12 March 2022 8:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் தமிழக மாணவர்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்.

சென்னை, 

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்காக முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழு, இன்று  டெல்லியிலிருந்து சென்னை வருகிறது. தமிழக மாணவர்களின் கடைசி குழுவை வரவேற்க, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையம் செல்லவுள்ளார். 

இதுகுறித்து கூறிய திருச்சி சிவா எம்.பி, 'உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 மாணவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். 366 பேர் அரசின் துணையின்றி தங்களது சொந்த செலவிலேயே வந்து விட்டனர். 34 மாணவர்களுக்கு ஊருக்கு வர விருப்பம் இல்லை' என்று கூறினார்.

Next Story