தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-ஆவது நாளாக 100-க்கு கீழ் குறைந்தது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 March 2022 8:18 PM IST (Updated: 14 March 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் சென்னையில் 33 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது.  கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 996- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 204 பேர் குணம் அடைந்துள்ளனர்.  

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 825- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தலைநகர் சென்னையில் 33 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 1054- பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.  


Next Story