தமிழகத்தின் பலத்தை பறைசாற்ற அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
முல்லை பெரியாறு - காவிரி நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் பலத்தை பறைசாற்ற அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
சென்னை,
.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லை பெரியாறு அணை என்பது முழுக்க முழுக்க தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அணையாகும். இதனை தன் வசம் எடுத்து கொள்வதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளதோ? என்ற சந்தேகம் கேரள அரசின் சமீபகால நடவடிக்கைகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.
கேரள அரசின் செயல்பாடு இப்படி என்றால், கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு மற்றும் காவிரி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் வாய்திறக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்ற அண்ணாவின் வாசகங்களை மனதில் நிலைநிறுத்தி, முல்லை பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து ஒற்றுமையாக குரல் கொடுத்து, தமிழகத்தின் பலத்தை பறைசாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story