சென்னை கோயம்பேட்டில் பல்துறை கண்காட்சி - அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் பல்துறை கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
சென்னை,
சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று தொடங்கி 7 நாட்கள் நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வித்துறை, செய்தி, மக்கள் தொடர்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆவின், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் மொத்தம் 20 அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த சாராம்சங்களை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story