சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு
சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் சந்தித்தனர்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் தற்செயலாக சந்தித்தனர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது முதல் அமைச்சர் மற்றும் நடிகர் விஜய் இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் வரவேற்று கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர்.
Related Tags :
Next Story