கரூர்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில், இரவு சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிறுவனத்தில் வேலை செய்து வரும் பணியாளர் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த ஷோரூமில் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், ஷோருமிற்கு பின்புறம் உள்ள சர்வீஸ் செண்டரில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story