அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் - வேலூரில் பரபரப்பு


அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் - வேலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 April 2022 8:58 PM GMT (Updated: 2022-04-09T02:28:53+05:30)

ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செயதனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட போதைபொருள் கடத்தல் பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான குழுவினர், காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது திருப்பதியில் இருந்து திருண்ணாமலை செல்லும் தமிழக அரசு பேருந்தில் சோதனை செய்ததில், இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இதனையடுத்து அந்த நபர்களிடம் இருந்து 3 பார்சல்களில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பேருந்தில் வைத்து கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story