தமிழக மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி திட்டம் அனைவர் மத்தியிலும், குறிப்பாக ஏழை-எளிய மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது கொரோனா தொற்று மீண்டும் உருமாறியுள்ளது மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த அலை குறித்து மருத்துவ வல்லுனர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை தரும் பொருட்டு 2 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதற்கான வசதி தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த மாதம் 10-ந்தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான கட்டணம் சேவை கட்டணம் உள்பட ரூ.375 அளவுக்கு இருக்கும் என்றும், இதுதொடர்பான நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்த கட்டணம் மக்களுக்கு கூடுதல் சுமை. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
மேலும், இந்தியாவில் கிட்டத்தட்ட 186 கோடி தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 10.39 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு இந்த திட்டம் வெற்றியடைந்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தடுப்பூசி திட்டம் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுதான். எனவே, முதல்-அமைச்சர், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்துவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநில அரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story