மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு; ஆறுகளை முன் கூட்டியே தூர்வாற விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் வாய்ப்புள்ளதால் ஆறுகள், பாசன கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ள ஒருங்கிணைந்த தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் காவிரி நீரை நம்பியுள்ளன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாயும். இந்த நீர் மேற்படி ஆறுகளின் 36 கிளை ஆறுகள் மூலம் கடைமடை வரை கொண்டு செல்லப்படும். ஆனால் ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளதால், கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் நீர் ஆதாரங்களை தூர்வாறுவதற்காக 176 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. எனவே பாசன கால்வாய்களை தூர்வாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரித கதியில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story