நெல்லையில் நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலில் மோதல்..!
நெல்லையில் நடைபெற்ற திமுக உட்கட்சித் தேர்தலில் 2 கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலினால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மற்றும் மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டியிட விரும்புவோரிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.
திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் கண்ணதாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டு மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் 2 கோஷ்டிகளுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனைத்து தரப்பினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கட்சி அலுவலக வளாகத்தில் நீண்டிருந்த கட்சியினரை போலீசார் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது மைதீன் மல்கர் என்பவர் போலீசாரின் தாக்குதலில் கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது போலீஸ்காரர் உலகு சங்கர் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story