அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 April 2022 12:30 AM IST (Updated: 30 April 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமானக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய ஊதியம் கேட்டுப் போராடி வரும் அரசு டாக்டர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும் தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு கடந்த 2009-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தவேண்டிய அரசு டாக்டர்களுக்கான ஊதியத்தை, கடந்த 11 ஆண்டு காலமாக உயர்த்தப்படவில்லை என்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மக்கள் உயிர்காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றியவர்கள் அரசு டாக்டர்கள். எனவே அவர்களது அடிப்படை உரிமையான ஊதிய உயர்வு உள்ளிட்ட நீண்டகால நியாயமான கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story