பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 May 2022 2:52 AM IST (Updated: 5 May 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடைமடை பகுதிகளுக்கு பாசன நீரினை கொண்டு சேர்ப்பதாக கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானி சாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆறுகளில் இருந்து பாசனவசதி தரும் நீர்வழி தடங்களைக் கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் அறிவியலுக்கு புறம்பானது. தரகு கமிசனுக்காக தமிழ்நாட்டு கிராமங்களைப் பாலைவனமாக மாற்றும் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் பொறுப்பற்றத்தனம் வன்மையான கண்டனத்திற்குரியது.

கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்கு சிறிதளவும் உதவாது என்று கூறி கிராமசபை கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராக தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளனர். விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி தற்போது மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க தி.மு.க. அரசு முனைவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

எனவே, பல்லுயிர் பெருக்கத்தை அழித்து சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் கடுமையாக பாதிக்கின்ற கொடிய திட்டமான பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story