சுப்ரீம் கோர்ட்டின் கருத்து சவுக்கடி: 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும்


சுப்ரீம் கோர்ட்டின் கருத்து சவுக்கடி: 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும்
x
தினத்தந்தி 6 May 2022 12:22 AM IST (Updated: 6 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் கருத்து சவுக்கடி: 7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும் கவர்னருக்கு சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவு எடுக்க தவறினால் அரசியலமைப்பு சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு உத்தரவிடுவோம்’, என சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது பெரும் நம்பிக்கையை தருகிறது. நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு தடுக்கப்பட்ட அவரது விடுதலை இன்றைக்கு சாத்தியப்பட இருப்பது அளப்பெரும் மனமகிழ்வை தருகிறது.

அரசியலமைப்பு சாசனத்தை துளியளவும் மதிக்காமல் கூட்டாட்சி தத்துவத்தை கேலிப்பொருளாக்கி, ஜனநாயகத்தை படுகொலை செய்து வந்த மத்திய பா.ஜ.க. அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக கவர்னரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் கூற்றை பார்க்கிறேன். ஆகவே, இனியும் தாமதிக்காது, 161-வது சட்டப்பிரிவின்படி 7 பேர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என கவர்னரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story