செங்கல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 42 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 42 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 May 2022 9:23 PM IST (Updated: 7 May 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 4 நாட்களில் மொத்தம் 972 பேர் பரிசோதிக்கப்பட்டதில், இதுவரை 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story