"திமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டும் வந்துவிடும்" - ஓ.பன்னீர்செல்வம்


திமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டும் வந்துவிடும் - ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 13 May 2022 2:07 PM GMT (Updated: 13 May 2022 2:07 PM GMT)

திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு பிரச்சனையும் வந்துவிடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையும் வந்துவிடுகிறது. 

எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது, எந்த நேரத்தில் தடைபடுகிறது என்பது தெரியாமல் மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தொடர் மின்வெட்டால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார். 

அப்போது, ஜெயலலிதா போல் நல்லாட்சி தருவேன் என சசிகலா கூறியது குறித்து கேட்டதற்கு, வந்தால் பார்ப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 


Next Story