பேரறிவாளனின் தாயாரிடம் தொலைபேசியில் உரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் தொலைபேசியில் உரையாடினார்.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் தொலைபேயில் உரையாடினார். இந்த உரையாடலின் போது, பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாளிடம் தனது மகிழ்ச்சியினை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story