குரூப்-2 தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 166 பேர் தேர்வு எழுதினார்கள் - கலெக்டர் தகவல்


குரூப்-2 தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 166 பேர் தேர்வு எழுதினார்கள் - கலெக்டர் தகவல்
x

குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 26 ஆயிரத்து 166 பேர் தேர்வு எழுதினார்கள் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

திருவள்ளூர்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கே .இ. நடேசசெட்டியார் அரசினர் மகளிர் மேல்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்கான தேர்வுகள் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் திருத்தணி என 5 பகுதிகளில் நடைபெற்றது.

26 ஆயிரத்து 166 பேர் இதில் திருவள்ளூர் பகுதியில் 7 ஆயிரத்து 713 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த்தில் 6 ஆயிரத்து 370 பேர தேர்வு எழுதினார்கள். 1,343 பேர் தேர்வு எழுதவில்லை. ஆவடி பகுதியில் 7 ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 6 ஆயிரத்து 187 பேர் தேர்வு எழுதினார்கள். 1,445 பேர் தேர்வு எழுதவில்லை. அதே போல பொன்னேரி பகுதியில் 5 ஆயிரத்து 904 பேர் தேர்வு எழுத தகுதிபெற்றதில் 5 ஆயிரத்து 4 பேர் தேர்வு எழுதினார்கள். 900 பேர் தேர்வு எழுத வில்லை. பூந்தமல்லி பகுதியில் 4 ஆயிரத்து 236 பேர் தேர்வு எழுததகுதி பெற்றிருந்ததில் 3 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுதினார்கள். 765 பே ர் தேர்வு எழுதவில்லை.

திருத்தணி பகுதியில் 5 ஆயிரத்து 825 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்ததில் 5 ஆயிரத்து 134 பேர் தேர்வு எழுதினார்கள். 691 பேர் தேர்வு எழுதவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 310 நபர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தும் நேற்று 26 ஆயிரத்து 166 நபர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 144 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், முதன்மை கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story