திருவள்ளூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருவள்ளூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, பஸ் நிலையம், பஜார் வீதி போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேற்கண்ட 3 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த அன்சாரி (வயது 40), திருவள்ளூர் எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்த கதிரவன் (32), அகமது பாஷா (40) என தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சீட்டுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,980 மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story