3 பேர் உயிரிழந்த விவகாரம்: மதுபான விடுதி உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு


3 பேர் உயிரிழந்த விவகாரம்: மதுபான விடுதி உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு
x
தினத்தந்தி 31 March 2024 4:17 AM GMT (Updated: 31 March 2024 5:52 AM GMT)

விடுதியின் உரிமையாளர் அசோக் குமார் நேற்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் விடுதி மேலாளர் சதிஷ் கைது செய்யப்பட்டார். மேலும் விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று இரவு அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் அசோக் குமார் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


Next Story