விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்


விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்
x

தொடர் விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

இந்த நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணித்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், ஆயுதபூஜை, விஜய தசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகள் உடன் சேர்த்து 813 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இவற்றில் 3 லட்சத்து 92 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story