திருக்கழுக்குன்றத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது


திருக்கழுக்குன்றத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது
x

திருக்கழுக்குன்றத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் சர்புதீன் என்பவர் கடந்த மாதம் 29-ந் தேதி காரில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் தவுலத்பீ (வயது 55) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படை அமைந்து தேடி வந்த நிலையில் திருக்கழுக்குன்றம் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த அகமது பாஷா (34), மசூதி தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி (47), கருமரப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது மொய்தீன் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story
  • chat