வாலிபரை தாக்கிய 3 பேர் கைது


வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
x

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

பெரிய காஞ்சீபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள தர்கா அருகே போதையில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து போதைக்கு அடிமையானதாக கூறப்படும் கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை சராமரியாக கையாலும், காலாலும், கட்டையாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் மயக்கம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அவரை தாக்கியது தேரடி தெருவை சேர்ந்த யாசர் (வயது 21), அவரது நண்பரான விக்ரம் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து யாசர் அவனது நண்பர் விக்ரம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். மேலும் 17 வயது சிறுவன் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story