நடிகர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது


நடிகர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது
x

சென்னையில் நடிகர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசித்து வரும் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரது மனைவி ராஜியை கட்டிப்போட்டு 200 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அவரது வீட்டில் வேலை செய்த காவலாளியான நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ், தனது கூட்டாளிகளுடன் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேபாளத்துக்கு தப்பிச்சென்ற ரமேஷ் உள்பட 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Next Story