கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது - மேலும் 7 பேருக்கு போலீசார் வலைவீச்சு


கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது - மேலும் 7 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x

கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேருக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

வேலூர் மாவட்டம், தக்கோலம் ராஜம்பேட்டை சேர்ந்தவர் தினேஷ் (வயது 21). இவர் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல தினேஷ் ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்ற போது, ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் வேறு கல்லூரியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தினேஷை சுற்றி வளைத்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டினார்கள். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டது.

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 7 கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story