ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரம்மாள் தலைமையிலான போலீசார் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருங்குளம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த அருங்குளம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 30), ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (52), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story