தமிழகத்தில் நாளை 31-வது தடுப்பூசி முகாம்; சென்னையில் ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு


தமிழகத்தில் நாளை 31-வது தடுப்பூசி முகாம்; சென்னையில் ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு
x

சுமார் 1 லட்சம் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ம்தேதி மற்றும் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது. சுமார் 1 லட்சம் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


Next Story