வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிக்கு 3,500 தன்னார்வலர்கள் நியமனம்


வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிக்கு 3,500 தன்னார்வலர்கள் நியமனம்
x

வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிக்கு 3,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

பேரிடர் மேலாண்மை பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 762 கிராமங்களிலிருந்து 3,500 தன்னார்வலர்கள் தேர்வு செய்து தமிழ்நாடு அரசின் முதல்நிலை மீட்பாளர்கள் என்ற திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மாவட்டத்தில் 3 கட்டங்களாக பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் 300 பேரிடர் கால நண்பர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் பருவமழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு 3,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெயர், முகவரி

மேலும், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் பேரிடர் கால நண்பர்களை தொடர்பு கொள்ளும் விதமாக அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் www.pudukkottai.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பருவமழை காலங்களில் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக தங்களது கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் பேரிடர் கால நண்பர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story