தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு
மறைமலைநகர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட நின்னகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42), தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வீட்டுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று வி்ட்டனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை வெட்டிய வழக்கில் மறைமலைநகர் காந்தி நகரை சேர்ந்த ஜெகன் (வயது 23), லிங்கம் (25), சீனிவாசன் (25) மற்றும் 18 வயதான ஒருவர் என 4 பேரை கைது செய்தனர். மேலும் சுப்பிரமணியனை முன்விரோதம் காரணமாக வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story