சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்
காங்கயம் நகர பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் காங்கயம் போலீசார் நகர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காங்கயம் பஸ் நிலையம் அருகே கார் நிறுத்தம் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக சீட்டாட்டம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட காங்கயம் பகுதியை சேர்ந்த கந்தசாமி, மூர்த்தி, சுரேஷ், சிவகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணம் ரூ.300 பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story