கோவில் திருவிழாவில் விஷ வண்டுகள் கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி


கோவில் திருவிழாவில் விஷ வண்டுகள் கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
x

சிவகங்கை அருகே அழகு நாச்சியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கை அருகே சுந்தர நடப்பு கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அக்னிச்சட்டி எடுத்துச் சென்றனர். கோவிலை நோக்கி கண்மாய் கரையில் சென்றபோது கோவில் அருகே ஆலமரத்தில் இருந்த விஷ வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டிக் கடித்தன.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவில் விஷ கண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story