தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 40 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தினை செயல்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு எண்ணெய் பிரித்து எடுக்கும் செக்கு 6 மானியத் தொகையில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம், சிறியவகை நெல் அரவை எந்திரம் 2 மானியத் தொகையில் ரூ.48 ஆயிரம் மதிப்பிலும், அரவை எந்திரம் 2 மானியத் தொகையில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் என 10 பொதுப்பிரிவினருக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் இலக்கு பெறப்பட்டு உள்ளது. மேலும் ஆதி திராவிட பழங்குடியினருக்கு எண்ணெய் பிரித்து எடுக்கும் செக்கு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் மானியத் தொகையில் வழங்கப்பட உள்ளது. எனவே மேற்கண்ட எந்திரங்கள் விவசாயிகள் மானியத்தில் பெற அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோரை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.