வண்டலூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்


வண்டலூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்
x

வண்டலூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு

மினி லாரி கவிழ்ந்தது

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வெங்கம்பாக்கத்தில் இருந்து பேவர் பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நந்தம்பாக்கத்திற்கு நேற்று காலை ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே செல்லும்போது முன்னால் சென்ற டிராக்டரை மினி லாரி முந்தி செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலை தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

5 பேர் படுகாயம்

இதில் மினி லாரியில் இருந்த டிரைவர் மற்றும் 4 கூலி தொழிலாளிகள் உள்பட 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த மினி லாரியை கிரேன் மூலம் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் காரணமாக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story