காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 5 பேர் கைது..!
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகே வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெடிகுண்டுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த 4 வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிப்பதற்காக மூலப் பொருட்கள் மற்றும் 1.3 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story