அரிவாளால் வெட்டி கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற 5 பேர் கைது


அரிவாளால் வெட்டி கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற 5 பேர் கைது
x

அரிவாளால் வெட்டி கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் டீச்சர்ஸ் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). இவர், மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் புழல் அருகே நண்பருக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஜோஸ்வாவிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்றனர். இதனை தடுத்ததால் ஜோஸ்வாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜோஸ்வா, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மீஞ்சூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த பவன் குமார் (21), மாதவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வர்ஷன் (22), புழல் அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்த சந்துரு (22), கோகுல் (21), சரண் (22) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story