விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் - சென்னை மாநகரம் முழுவதும் பொதுஇடங்களில் வைக்க ஏற்பாடு


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் - சென்னை மாநகரம் முழுவதும் பொதுஇடங்களில் வைக்க ஏற்பாடு
x

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரத்து 500 விநாயகர் சிலைகள் சென்னை மாநகர் முழுவதும் பொதுஇடங்களில் வழிபாட்டுக்கு வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். வருகிற 31-ந் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை மாநகர இந்து முன்னணி இயக்கம் சார்பில் 3 அடி முதல் 13 அடி வரை உயரம் வரை உள்ள கற்பக விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், அரக்கன் விநாயகர், அழகர் விநாயகர் உட்பட 5 ஆயிரத்து. 500 விநாயகர் சிலைகள் எர்ணாவூர் கிரிஜா நகர் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வடசென்னை உள்ளிட்ட சென்னை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வழிபாட்டுக்கு சிலைகள் வைப்பதற்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை வாங்கி வந்து எர்ணாவூரில் வைத்து வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமடைந்து காணப்பட்ட காரணத்தால் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசின் தடை அமலில் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் அடங்கிய நிலையில், வருகிற விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் வழிபாட்டுக்கு பொதுஇடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. இந்து முன்னனி சார்பில் சென்னை மாநகர் முழுவதும் பொதுஇடங்களில் வைக்கப்பட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்களின் வழிபாட்டுக்கு பின்னர், அடுத்த மாதம் 4-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருப்பதாக இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன் கூறினார்.


Next Story