காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு


காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு
x

காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம்

லோக் அதாலத்

காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் லோக் அதாலத் கூடியது. காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் லோக் அதாலத்தை தொடக்கி வைத்து சமரசம் செய்து வைக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

தொடக்க விழாவுக்கு முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ்.அருண்சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

621 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் விசாரணைக்காக மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 1,210 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.

தொடக்க விழா நிகழ்வில் நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன், வக்கீல்கள் சத்தியமூர்த்தி, பரணி, ரஞ்சனி மற்றும் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் நன்றி கூறினார்.


Next Story