10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு


10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
x

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31-ந்தேதி வரை நடைபெற்றது. 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

12ம் வகுப்பு தேர்வுகளில் 1,95,292 மாணவர்களும், 11 ம் வகுப்பு தேர்வில் 2,58,641 மாணவர்களும், 10 ம் வகுப்பு தேர்வில் 2,25,534 மாணவர்களும் என மொத்தமாக 6,49,467 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் நடைபெறும் உடனடித் தேர்வுகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இதற்கான செயல்திட்டத்தை தயார் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வாட்ஸப் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story