சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் 66 சாலை தடுப்புகள்...!


சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சத்தில் 66 சாலை தடுப்புகள்...!
x
தினத்தந்தி 17 Jun 2023 6:07 PM GMT (Updated: 18 Jun 2023 7:15 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 10 சோதனை சாவடிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் 66 சாலை தடுப்புகளை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழங்கினார்.

ராணிப்பேட்டை

சாலை தடுப்புகள்

தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து சாலை தடுப்பான்கள் மற்றும் சோலார் சாலை தடுப்பான்கள் வழங்கபட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சாலை தடுப்பான்கள்- 48, சோலார் போக்குவரத்து தடுப்பான்கள்- 18 என மொத்தம் 66 போக்குவரத்து தடுப்பான்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளுக்கு பிரித்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

சீக்கராஜாபுரம் சோதனை சாவடிக்கு-7, அரும்பாக்கம் சோதனை சாவடிக்கு-4, தாமரைப்பாக்கம் சோதனை சாவடிக்கு-6, அரப்பாக்கத்திற்கு-8, சில்வர்பேட்டைக்கு-7, ரெட்டைகுளத்திற்கு-8, புதுகேசவபுரத்திற்கு-6, பள்ளூர் சோதனை சாவடிக்கு-6, பிள்ளாஞ்சிக்கு-6 பொன்னியம்மன் பட்டரை சோதனை சாவடிக்கு-8 என மொத்தம் 10 சோதனை சாவடிகளுக்கு சமந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story