ஊட்டியில் 7-வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை - சுற்றுலா பயணிகள் அவதி


ஊட்டியில் 7-வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை - சுற்றுலா பயணிகள் அவதி
x

ஊட்டியில் இன்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 7-வது நாளாக சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தொட்டபெட்டா, அவலாஞ்சி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால், விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பங்களோடு ஊட்டிக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், அவர்கள் ஆங்காங்கே சில மணி நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது.


Next Story