தீபாவளி பண்டிகை கூட்டநெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 8 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்


தீபாவளி பண்டிகை கூட்டநெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 8 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
x

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 8 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பெரும்பாலானவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களி்ல் முண்டியடித்து செல்கின்றனர்.இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த 2 நாட்களாக கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் அதிரடி ஆய்வு செய்தனர். போக்குவரத்து இணை கமிஷனர் சத்யநாராயணன், மாநில போக்குவரத்து உதவி செயலாளர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ.க்கள் சுந்தரமூர்த்தி, மோகன் மற்றும் 4 ஆய்வாளர்கள் கொண்ட குழு 140-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தியது.இதில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய 8 ஆம்னி பஸ்களுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story