புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது


புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
x

புத்தாண்டு தினத்தன்று மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

புத்தாண்டு அன்று நள்ளிரவில் அம்பத்தூர் பகுதியில் பல்வேறு சாலைகளில் வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பியபடி செல்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 8 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பந்தயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் வாகன பதிவு எண்களை வைத்து அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த ஜாபர் (வயது 19), ராஜேஷ் (20), ஜீவசிரில் (19), மதன்குமார் (20), விஷ்வா (19), ஜெயந்த் (19), ஜெகஜீவன் ராம் (21) அபிஷேக் (19) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இதில் ஜீவசிரில் மற்றும் அபிஷேக் தவிர மற்ற 6 பேரும் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து 6 உயர்ரக மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story